/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆத்துார் மக்களுக்காக சமூக சேவகராக செயல்படுகிறேன் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

ADDED : பிப் 09, 2024 05:10 AM
சின்னாளபட்டி: ''சமூக சேவகர் போல ஆத்துார் தொகுதி மக்களுக்காக செயல்படுகிறேன்''என, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
காந்திகிராம அறக்கட்டளைக்கு சொந்தமான தம்பி தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்க கட்டட திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:
கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், கல்வியறிவையும் காந்திகிராம அறக்கட்டளை காப்பாற்றுகிறது.
பல சிறந்த கல்வியாளர்களின் அறிவியல் வல்லுனர்களையும் இப்பள்ளி உருவாக்கியுள்ளது.
சமூக சேவகர் போல ஆத்துார் தொகுதி மக்களுக்காக செயல்படுகிறேன். கல்வியும், விளையாட்டும் தான் வாழ்நாள் வரை உடன் வரக்கூடியவையாக உள்ளது. மாணவர்கள் இவ்விரு துறைகளிலும் சாதனை படைக்க தயாராக வேண்டும் என்றார்.
அறங்காவலர் வி.கே.சிவக்குமார் தலைமை வகித்தார். ஆத்துார் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, நடராஜன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா வரவேற்றார். ஆத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முருகேசன், பி.டி.ஓ.,க்கள் குமரவேல், தட்சிணாமூர்த்தி, பேரூராட்சி தலைவர் பிரதீபா பங்கேற்றனர்.