/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நுாறு நாள் திட்டத்தை நிறுத்தினால் விவசாயம் செழிக்கும் விவசாயிகள் தின விழாவில் குமுறல்

ADDED : பிப் 15, 2024 06:00 AM

வேடசந்துார்: நுாறு நாள் வேலை திட்டத்தை நிறுத்தினால் தான் விவசாயம் செழிக்கும் இல்லையேல் விவசாயம் பாழ்படும் என வேடசந்தூரில் நடந்த விவசாயிகள் தின விழாவில் விவசாயிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.
வேடசந்துார் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த விவசாயிகள் தின விழா கருத்தரங்கம் நடந்தது. நிலையத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். முதன்மை விஞ்ஞானி மணிவேல் முன்னிலை வகித்தார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சேசு மாதேவ் பேசினார்.
விவசாயிகளிடம் கருத்து கேட்டபோது பேசிய விவசாயிகள், பத்து ஆண்டுகளுக்கு முன்பு விற்கப்பட்ட அதே விலைவாசியில் தான் இன்றும் விவசாய உற்பத்தி பொருட்கள் விற்கப்படுகிறது. போதிய விலை இல்லை. இதனால் விலை நிர்ணயம் அவசிய தேவை என்றனர். மேலும் பேசிய விவசாயிகள், போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. குடிநீரும் உவர்ப்பு நீராக மாறிவிட்டது. விவசாயம் பாழ் பட்டு போனதற்கு காரணம் நுாறு நாள் வேலை திட்டம் தான். கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. விவசாயிகள் விவசாயத்தை மறந்து கால்நடை வளர்ப்புக்கு மாறி வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த வேண்டும் என தெரிவித்தனர். விஞ்ஞானி ஸ்ரீதர், டாக்டர் செந்தில்குமார் பங்கேற்றனர்.