ADDED : நவ 29, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் குளிக்க செல்லக்கூடாது என குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குஜிலியம்பாறை அரசு துவக்கப் பள்ளியில் நடந்த இதன் விழாவில் தீயணைப்பு அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமை வகித்தார்.அப்போது அவர் பேசியதாவது: தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மாணவர்கள், தங்களது பெற்றோரிடம் கூறி
முறையாக நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள், தாங்களாகவோ, நண்பர்களுடன் சேர்ந்து ஆர்வக்கோளாறில் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிக்க கூடாது என்றார்.

