/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்; புகார் செய்ய வாட்ஸ்ஆப்
/
'கொடை'யில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்; புகார் செய்ய வாட்ஸ்ஆப்
'கொடை'யில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்; புகார் செய்ய வாட்ஸ்ஆப்
'கொடை'யில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்; புகார் செய்ய வாட்ஸ்ஆப்
ADDED : ஜூலை 20, 2025 05:02 AM
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதி, அதனை சுற்றிய ஊர்களில் சட்டவிரோத தங்கும்விடுதிகள் குறித்து புகார் செய்ய வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கலெக்டர் சரவணன் செய்திக்குறிப்பு: சென்னை உயர்நீதிமன்ற வழக்கு உத்தரவின்படி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதியற்ற, சட்டத்திற்கு புறம்பான தங்கும்விடுதிகள் சம்பந்தமாக 18004 250150 கட்டணமில்லா எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை புகார் அளிக்கலாம்.24 மணி நேரமும் இயங்கும் 75985 78000 எண்ணிற்கும் வாட்ஸ்ஆப் மூலமாக புகைப்படம், வீடியோக்கள் அனுப்பி பொதுமக்கள் புகார் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.