/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டம் முழுவதும் கள்ள மது விற்பனை தாராளம்; சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு வாய்ப்பு

ADDED : ஜூலை 09, 2025 06:53 AM

மாவட்டத்தில் டாஸ்மாக் சார்பில் ஏலம் விடப்பட்ட கடைகளுடன் ஏலம் எடுக்கப்படாத பார்கள் உள்ளிட்ட அனுமதி பெறாத விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இதோடு கிராமங்களில் டாஸ்மாக் கள்ள மது விற்பனை தாராளமாக நடக்கிறது. மதுப்பழக்கம் கிராமங்களில் அதிகரித்து உள்ளதால் உறவினர்களுக்கு இடையே பிரச்னைகள்,விசேஷ வீடுகளில் தகராறு ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருகிறது.
பல கிராமங்களில் பெண்களில் கள்ள மது விற்பனை கூடங்களை பெண்களே அடித்து நொறுக்கி வருகின்றனர். பெண்கள் போராட்டம்பின் ஓரிரு நாட்கள் விட்டுவிட்டு அடுத்த சில தினங்களில் கள்ள மது விற்பனை ஜோராக நடைபெறுகிறது.
டாஸ்மார்க் நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. மது ஒழிப்பு போலீசாரும் கிராமங்களுக்கு வருவதில்லை.
நகர் பகுதியில் டாஸ்மாக் செயல்படும் பகுதியில் மட்டும் பெயரளவிற்கு ஆய்வினை நடத்தி சென்றுவிடுகின்றனர்.
கள்ள மது விற்பனையை கிராமங்களில் இருந்து அறவே ஒழித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அவசியமாகிறது.