/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் மீட்டர் இடமாற்ற கட்டணம் உயர்வு; பழைய நிலையை தொடர வேண்டுகோள்
/
மின் மீட்டர் இடமாற்ற கட்டணம் உயர்வு; பழைய நிலையை தொடர வேண்டுகோள்
மின் மீட்டர் இடமாற்ற கட்டணம் உயர்வு; பழைய நிலையை தொடர வேண்டுகோள்
மின் மீட்டர் இடமாற்ற கட்டணம் உயர்வு; பழைய நிலையை தொடர வேண்டுகோள்
ADDED : ஜன 29, 2025 06:27 AM

தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயர்வு, வாடகை கட்டடங்கள் மானிய குறைப்பு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பு, வணிக நிறுவனங்களுக்கு மும்மடங்கு கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் பெருமளவில் பாதிப்படைகின்றனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் குறைக்கவில்லை. ஆனால் வணிக நிறுவனங்களுக்கான கட்டணம் மும்மடங்கில் இருந்து இரு மடங்காக குறைத்துள்ளது.
இதனிடையே கட்டண உயர்வு அமல்படுத்திய ஒராண்டுக்குள் வீடுகளில் மின் மீட்டர், மின் ஒயர் மாற்றம் செய்வதற்கான மின்வாரிய ஒப்பந்தத்திற்கான பத்திர கட்டணத்தை உயர்த்தி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மின் மீட்டர், மின் வயர் மாற்றத்துக்கு மின்வாரியத்தில் ரூ. 100க்கு பத்திரம் பெற்று அதில் மின்வாரியமும் மின் நுகர்வோரும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என விதி உள்ளது.
இந்த பத்திர கட்டணம் 100ல் இருந்த நிலையில் ரூ. 500 ஆக சப்தமின்றி உயர்த்தப்பட்டுள்ளது. விவரம் தெரியாத பொதுமக்கள் கட்டண உயர்வு தெரியாததால் ரூ.நுாறுக்கு பத்திரத்தை வாங்கிய பின்ஏமாற்றம் அடைகின்றனர்.இதற்காக வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

