/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விளைச்சல் இல்லாத நெற்பயிர்களால் சாகுபடி பாதிப்பு ; புதிய களைக்கொல்லியால் மரபணு மாற்றமா

ADDED : மார் 17, 2025 05:44 AM

மாவட்டத்தில் பழநி, பாலசமுத்திரம், ஆயக்குடி, அய்யம்புள்ளி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விளைவிக்கப்படுகிறது.
தற்போது கோடை போகம் விளைந்துள்ளது. நேரடி விதைப்பு மூலம் பயிர் செய்யப்படுகிறது. இங்கு ஜோதி மட்டை, அக் ஷயா, சிந்து காவிரி உள்ளிட்ட பல்வேறு வகை ஒட்டுரக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டு விளைவிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் நெற்பயிர், வயலில் உருவாகும் களை செடிகளை கட்டுப்படுத்த புதிய ரக களைக்கொல்லியை பயன்படுத்தி னர். இந்நிலையில் தாய் நெல் எனக் கூறப்படும் நெல் வகைகள் களை பயிராக வளர்ந்துள்ளன.
நெல் விளைச்சல் பாதிக்கு பாதி குறைந்துள்ளது. 60 சென்ட் நிலத்தில் 1500 கிலோ நெல் விளையும் வயலில் 750 கிலோ மட்டுமே நெல் விளைந்தது. விளைச்சல் வீணாகி உள்ளது. விவசாயிகள் கடும் வேதனை, நஷ்டம் அடைந்துள்ளனர். விதை நெல்லில் கலப்படம் அடைந்துள்ளதா, அல்லது வீரிய ரக களைக்கொல்லி மருந்தால் மரபணு பாதிப்பு ஏற்பட்டதா என குழப்பமடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.