/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தனியார் நிறுவனத்தில் ரூ. 1.16 கோடி கையாடல்
/
தனியார் நிறுவனத்தில் ரூ. 1.16 கோடி கையாடல்
ADDED : அக் 09, 2024 05:23 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் ரூ.1.16 கோடி கையாடலில் ஈடுபட்ட 14 ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் ஜெயசீலன் 53. கறிக்கோழிகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் நிறுவனத்தை நடத்துகிறார். இங்கு திருப்பூரை சேர்ந்த பிரசாத் 38, ஊழியராக வேலை செய்தார்.
இவர் ஜெயசீலன் கூறிய முகவரிக்கு கோழிகளை அனுப்பாமல் தனக்கு தெரிந்த மதுரை மேலுார், விராலிமலையை சேர்ந்த இருவருக்கு அனுப்பி அதன்மூலம் ரூ.46 லட்சத்தை பெற்றுகொண்டு தலைமறைவானார்.
திண்டுக்கல் பழநி ரோடு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் 50. இவர் கன்னிவாடியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.
இங்கு 2022ல் ஊழியர்களாக மதுரை நந்தகுமார், திண்டுக்கல்லை சேர்ந்த மருதமுத்து, அகிலன், மணிகண்டன், மாரிக்குமார், சங்கர், காளிமுத்து, செல்வராஜ், சசிக்குமார், வினோத்கண்ணன், முருகேஸ்வரி, திருப்பூர் தினேஷ்பாபு, தேனி ராஜசேகரன் என 13 பேர் பணியாற்றினர்.
இவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து பலருக்கும் கடன் கொடுத்ததாக ரூ.70 லட்சத்தை கையாடல் செய்தனர். மீனாட்சிசுந்தரம் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.
இரு புகார்களின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, எஸ்.ஐ.,கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.