ADDED : டிச 01, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டம் சார்பில் வடமதுரை ஒன்றிய அலுவலக வளாகத்தில் வானவில் மையம், பாலின வள மையம் துவக்கப்பட்டுள்ளது.
பி.டி.ஓ.,நளினா திறந்து வைத்தார். தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசார உறுதிமொழி எடுத்தனர். ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி, உதவி திட்ட அலுவலர் வெற்றிச்செல்வன், வடமதுரை இன்ஸ்பெக்டர் சுமதி பங்கேற்றனர்.

