ADDED : செப் 05, 2025 02:40 AM
பழநி: பழநி முருகன் கோயில் சார்பில் ஓதுவார் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. முழு நேர மூன்றாண்டு பயிற்சி, பகுதி நேரம் நான்காண்டுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
பள்ளியில் முழு நேர பயிற்சிக்கு சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.10,000 ஊக்க தொகை,பகுதி நேர பயிற்சிக்கு ரூ.5000 ஊக்க தொகை வழங்கப்படுகிறது.
தற்போது 2025-- -26 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் 13 வயது முதல் 20 வயது வரை இருக்க வேண்டும். ஹிந்து மதத்தை பின்பற்றுவதாக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை palanimurugan.hrce.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து படிவத்தை இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி, 624 601 முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.