/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துக்கள் அதிகரிப்பு! உயிர் பலியை குறைக்க தேவை நடவடிக்கை
/
போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துக்கள் அதிகரிப்பு! உயிர் பலியை குறைக்க தேவை நடவடிக்கை
போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துக்கள் அதிகரிப்பு! உயிர் பலியை குறைக்க தேவை நடவடிக்கை
போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துக்கள் அதிகரிப்பு! உயிர் பலியை குறைக்க தேவை நடவடிக்கை
ADDED : பிப் 22, 2024 06:18 AM

விபத்து பாதிப்புகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட போக்குவரத்து விதிகளை அரசு நிர்ணயித்துள்ளது. வாகன ஓட்டுநர்களின் வசதி, சாகச வெளித்தோற்ற பயணத்திற்காக இவற்றை கடைபிடிப்பதில் பலர் அலட்சியம் காட்டுகின்றனர்.
ஆண்டுதோறும் போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு மாதத்தை அரசு கடைபிடித்து வருகிறது. இது தவிர உள்ளூர் போக்குவரத்து துறை தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலோர் இதை கண்டு கொள்வதில்லை.
சரக்கு வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட எடை உயரத்தை விட கூடுதலான அளவில் பொருட்களை எடுத்துச் செல்வது, இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாத பயணம், போதிய பயிற்சி, டிரைவிங் லைசன்ஸ் இல்லாத சூழலில் வாகனங்களை ஓட்டிச்செல்வது போன்ற பிரச்சனைகள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன. போலீசார் பிரச்னையின் மீது பெயரளவில் அவ்வப்போது வழக்கு பதிவு, அபராத வசூல் செய்த போதும் இது போன்ற பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள நான்கு வழிச்சாலை, கிராமப்புறங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றிலும் பராமரிப்பு நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு நீடிக்கிறது.
உரிய இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அற்ற சூழலில் ரோட்டோர குழிகள், வேகத்தடைகள், வேகத்தடுப்புகள், துண்டிக்கப்பட்ட ரோடு போன்ற அம்சங்களும் விபத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
இதில் பெரும்பாலான சம்பவங்களுக்கு வாகன ஓட்டிகளின் விதிமீறல் அலட்சிய பயணமே முக்கிய பங்கு வகிக்கிறது.
விபத்துக்கள் அதிகரிப்பை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மட்டுமின்றி ரோடு பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பதில் நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் நிர்வாகத்தின் கண்காணிப்பு அவசியமாகிறது.