/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்டுகொள்ளாத அதிகாரிகளால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு: பள்ளி படிப்பு பாதியில் நிற்கும் அவலம் தொடர்கிறது

ADDED : டிச 31, 2024 05:06 AM

மாவட்டம் முழுவதும் கிராமங்களாக இருப்பதால் மக்கள் அதிகளவில் விவசாய தொழில்களில் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமில்லாமல் கொடைக்கானல்,சிறுமலை சுற்று வட்டார பகுதிகளில் மலை கிராமங்களாக உள்ளதால் இங்குள்ள மக்கள் பெரும்பாலோனோர் படிக்காமலிருக்கின்றனர்.
இதனால் அருகிலிருக்கும் கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். அவர்களின் பிள்ளைகளை வீட்டின் அருகிலிருக்கும் நடுநிலை,உயர் நிலைப்பள்ளிகள் வரை படிக்க வைக்கின்றனர். அதையும் சிலர் செய்யாமல் அதற்குரிய விழிப்புணர்வு இல்லாமல் சிறியளவிலான வருமானம் கிடைக்கும் என்பதால் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகளை தங்களுடன் வேலைக்கு அழைத்து செல்கின்றனர். சில குடும்பங்களில் காலாண்டு,அரையாண்டு,முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை நேரத்தில் குடும்ப சூழ்நிலைகளை கருதி தங்கள் பிள்ளைகளை பெட்ரோல் பல்க்,பெயிண்ட் அடிப்பது,கட்டட வேலை செய்வது உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளுக்கு அனுப்புகின்றனர். இதை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது தற்போது குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் அதிகரித்துள்ளது.
தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்ட நிலையில் கட்டட தொழில்கள்,பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பணத்தை பார்த்ததும் அவர்கள் மனம் மாறி விடுமுறை முடிந்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் இடை நின்று மீண்டும் பண மோகத்தில் கூலி வேலைகளுக்கு சென்று தங்கள் வாழ்வை தொலைக்கும் சம்பவங்கள் தான் தொடர்கிறது. மாவட்ட கல்வி அதிகாரிகளும் இடை நின்ற மாணவர்கள் பிரச்னைகள் குறித்து முறையாக விசாரிக்காமல் தங்களுக்கு என்ன என இருக்கின்றனர்.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழந்தை தொழிலாளர்களை வேலைகளுக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.