/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
/
பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
ADDED : ஜன 12, 2025 05:09 AM
கன்னிவாடி : கடும் பனிப்பொழிவு தொடரும் சூழலில் பழநி பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பாதையாத்திரை பயணம் ஆண்டுதோறும் மார்கழி முதல் வாரம் முதலே துவங்கும். மாவட்டத்தின் பல்வேறு பகுதி மட்டுமின்றி தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற வெளி மாவட்ட பக்தர்களும் மெட்டூர்-மூலச்சத்திரம் வழியே பாதயாத்திரை செல்வர். ஜனவரியில் தைப்பூச விழா முடிந்த பின்பும் பங்குனி உத்திரம் வரை பக்தர்களின் பாதயாத்திரை பயணம் இருக்கும். இந்தாண்டு பக்தர்களின் வருகை 4 வாரங்களுக்கு முன் துவங்கியது. கடுமையான பனிப்பொழிவு இடையே பாதயாத்திரை தொடர்கின்றனர்.
இவர்கள் வசதிக்காக செம்பட்டி தடத்திலான பல புறநகர் பஸ்கள் ரெட்டியார்சத்திரம் ரோட்டில் செல்கின்றன. நடக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக காமலாபுரம், செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் இடையே கூடுதல் டவுன் பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

