/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சட்ட விரோத மது விற்பனை அதிகரிப்பு ; தேவை துறை ரீதியான நடவடிக்கை
/
சட்ட விரோத மது விற்பனை அதிகரிப்பு ; தேவை துறை ரீதியான நடவடிக்கை
சட்ட விரோத மது விற்பனை அதிகரிப்பு ; தேவை துறை ரீதியான நடவடிக்கை
சட்ட விரோத மது விற்பனை அதிகரிப்பு ; தேவை துறை ரீதியான நடவடிக்கை
ADDED : செப் 09, 2024 04:29 AM

கொடைரோடு : திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் மது விற்பனை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் டாஸ்மாக் மது விற்பனை பேரூராட்சி அளவில்தான் செயல்பட்டது. டாஸ்மாக் டெண்டர் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பார்கள் மட்டுமே இயங்கியது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு டெண்டர் காலம் முடிவடைந்தும் மறு டெண்டர் விடாமல் பார்கள் 2 ஆண்டுகளாக இயங்கியது. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திய கட்சியினர் டாஸ்மாக் கடை அருகே பார்களை நடத்தினர். மாவட்ட நிர்வாகமும் அரசும் கண்டு கொள்ளவில்லை. இதனால் தி.மு.க.,வினரிடையே சட்ட விரோதமாக மது விற்பதில் பலத்த போட்டி ஏற்பட்டது. ஒரு சில ஒன்றியங்களில் குக்கிராமங்களில் கூட சட்ட விரோத மது விற்பனை அதிகரித்து உள்ளது. இதனால் கிராமங்களிலும் குடிபோதை தகராறுகள் அதிகரித்து போலீசாருக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இதன்மீது அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.........
தடுக்க வேண்டும்
அனுமதி இல்லாத பார்கள் 24 மணி நேரமும் இயங்குகிறது. தற்போது குக் கிராமம் வரை பரவி பள்ளி மாணவர்களும் கெட்டுப்போக வாய்ப்பாக அமைந்துள்ளது. சிலுக்குவார்பட்டி பிரிவில் உள்ள கடையில் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனை புகைப்படமாக எடுத்து மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு அனுப்பியும் நடவடிக்கை எதுவும் இல்லை. டாஸ்மாக் நிர்வாகம் பார்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணாதுரை, சைல்ட் வாய்ஸ் நிறுவனர், நிலக்கோட்டை.
.......................................