/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டை விலை உயர்வு
/
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டை விலை உயர்வு
ADDED : அக் 16, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சுற்றிய கிராமப் பகுதிகளில் வெண்டைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்த வாரம் அறுவடை அதிகமாக இருந்தால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிக்க கிலோ ரூ.10 க்கு விற்பனையானது.
இந்நிலையில் மழை காரணமாக அறுவடை பாதிக்க வரத்து குறைந்ததால் ரூ.10 விற்ற வெண்டைக்காய் நேற்று ரூ.20க்கு விற்றது. மழை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.