sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆட்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு  அதிகரிப்பு: திருவிழா பாதுகாப்புக்கு வெளியூர் போலீசார்

/

ஆட்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு  அதிகரிப்பு: திருவிழா பாதுகாப்புக்கு வெளியூர் போலீசார்

ஆட்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு  அதிகரிப்பு: திருவிழா பாதுகாப்புக்கு வெளியூர் போலீசார்

ஆட்கள் பற்றாக்குறையால் வேலைப்பளு  அதிகரிப்பு: திருவிழா பாதுகாப்புக்கு வெளியூர் போலீசார்

1


ADDED : பிப் 07, 2026 06:00 AM

Google News

ADDED : பிப் 07, 2026 06:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனால் பணிகளில் தொடர்ந்து செயல்படுவதால் போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக அனைத்து ஸ்டேஷன்களிலும் போலீசார் போதுமானதாக இல்லை.

பற்றாக்குறை உள்ள நிலையில் காவலர்கள் அயல் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் ஸ்டேஷன்களில் நடைபெறும் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இரவு நேர பணியில் ஈடுபடும் போலீசாரை மீண்டும் அழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக பழநி பகுதியில் தைப்பூச நிகழ்வின்போது வெளியூரிலிருந்து 3500 போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போதும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வருகை, வாகனங்களின் வருகை அதிக அளவில் உள்ளது. இதனால் போக்குவரத்தின் நெரிசலால் பழநி நகர் பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து விதி மீறல்களும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போதுமான அளவு போக்குவரத்து போலீசார் இல்லை. அடிவாரம் பகுதியில் நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தனியாக போலீசார் செயல்பட வேண்டிய நிலை உள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலால் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us