/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை... அதிகப்படுத்துங்க: சர்வர் பழுது பிரச்னைகளால் அலைக்கழிப்பு
/
இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை... அதிகப்படுத்துங்க: சர்வர் பழுது பிரச்னைகளால் அலைக்கழிப்பு
இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை... அதிகப்படுத்துங்க: சர்வர் பழுது பிரச்னைகளால் அலைக்கழிப்பு
இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை... அதிகப்படுத்துங்க: சர்வர் பழுது பிரச்னைகளால் அலைக்கழிப்பு
ADDED : அக் 11, 2025 04:39 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஆதார் அட்டை உட்பட பல்வேறு சேவை தொடர்பான பணிகளில் சிரமம் களையப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மாநில தகவல் தொழில்நுட்ப துறையின் மின்னாளுமை முகமை வாயிலாக பொது இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் இருந்து மக்கள் தங்களின் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு ஆவணங்களுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்கின்றனர். உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட அளவிலான பொது இ-சேவை மையங்களே உள்ளன. தாலுகா அலுவலகங்கள், நகர் பகுதிகள், பேருராட்சிகள் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலே இ-சேவை மையங்கள் உள்ளன. புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது பெயர் மாற்றம், முகவரி மாற்றம், மாற்று புகைப்படம் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை ஆதார் இ-சேவை மையங்கள் வாயிலாக தான் மேற்கொள்ள வேண்டும். தாலுகா அளவில், ஓரிரு ஆதார் சேவை மையங்கள் மட்டுமே இருப்பதால் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. சில நேரங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.
இந்த அலைக்கழிப்பால் பெரும்பாலானோர் ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும். அதே நேரம் ஆதார் அட்டை சார்ந்த பணிகளில் மேற்கொள்வதில் உள்ள அலைக்கழிப்பை போக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.