/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்கள் நடமாட்ட பகுதிகளில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு! நெருக்கடி இடங்களில் அத்துமீறல்

ADDED : ஏப் 26, 2024 01:22 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சிகள் உள்ளன.
மேலும் பல பேரூராட்சிகள் உள்ளன. நகரங்களில் மக்கள் அதிகமாக கூடும் இடமான பஸ் ஸ்டாண்ட்களில் சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.
இதனால் பயணிகள் நடந்து சென்று பஸ் ஏறுவதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளதால் நெரிசல் ஏற்படுகிறது.
பல பஸ் ஸ்டாண்ட்களில் கடைகளுக்காக வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை காட்டிலும் இரண்டு மூன்று அடிகள் வெளியே நீட்டி ஆக்கிரமிப்பதால் நடைபாதை குறுகலாகி விடுகிறது. இதே போல் பஸ்டாண்டிற்குள் பஸ்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட ரேக்குகளில் டூவீலர் ஆக்கிரமிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் நெரிசலுடன் அந்த இடங்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த ரோடுகள், தெருக்களில், டூவீலர்கள் தள்ளுவண்டிகள் ,சிறு வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் நடந்து செல்வதில் பிரச்னை ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகன விபத்துகளுக்கும் வழிவகை செய்கிறது. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் தாராளமாக நடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.