/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி அடிவாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
/
பழநி அடிவாரத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
ADDED : ஜன 08, 2024 05:21 AM
பழநி, : பழநி அடிவாரம் கடைகளில் தைப்பூச சீசன் விற்பனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கவர்கள் பயன்பாடு அதிகரித்தது. கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழநி அடிவாரம் கடைகளில் தைப்பூச விழாவை முன்னிட்டு வெளிமாநில மாவட்ட பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. பேன்சி, பொம்மை கடைகள், சிறிய ஓட்டல்களில் தடை பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வாங்குகின்றனர்.
இதனால் அடிவாரம் பகுதியில் டன் கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகிறது. உள்ளாட்சி அமைப்பினர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடைகள் உள்ளிட்ட பகுதிகளை சோதனைகளை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கான கட்டுப்படுத்த வேண்டும்.
துணி பைகள் பாத்திரங்களை கொண்டு பொருட்களை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தவேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.