/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஊராட்சிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள்; குடிநீர் சப்ளை, தூய்மை பணிகளில் தள்ளாட்டம்
/
ஊராட்சிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள்; குடிநீர் சப்ளை, தூய்மை பணிகளில் தள்ளாட்டம்
ஊராட்சிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள்; குடிநீர் சப்ளை, தூய்மை பணிகளில் தள்ளாட்டம்
ஊராட்சிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள்; குடிநீர் சப்ளை, தூய்மை பணிகளில் தள்ளாட்டம்
ADDED : ஜன 18, 2024 06:20 AM

உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தவரை நகர்புறம், ஊரகம் என இரு பெரும் பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களை பொருத்தவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் நிதி ஆதாரம், வரி வருமான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதே போல் பணியாளர்கள் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது. ஊரக உள்ளாட்சியை மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளே மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ளன. குறிப்பாக குடிநீர் சப்ளை, துாய்மை பணிகளை உறுதி செய்வது இவற்றின் முக்கிய பொறுப்பாகும்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 31 ஊராட்சிகளில் செயலாளர் பணியிடம் காலியாக உள்ளன.
அருகில் உள்ள ஊராட்சி செயலாளர்களே கூடுதல் பொறுப்பாக சேர்த்து கவனிக்கும் நிலை உள்ளது. இதுதவிர பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் காலியான மேல்நிலை நீர்தொட்டி இயக்குபவர்கள் பணியிடங்கள் 20 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுவதால் மேல்நிலை தொட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
துாய்மை பணியாளர் காலி பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாட்களை நியமித்து பணிகளை செய்யும் நிலை உள்ளது. பணியில் ஏதாவது சிக்கல், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கான தீர்வு காண்பதும் சவாலான விஷயமாக மாறிவிடுகிறது. இதை கருதி காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.