தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்

சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்

சுதந்திர தின விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : ஆக 10, 2026 09:26 PM

ADDED : ஆக 10, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 09:26 PM ADDED : ஆக 10, 2026 09:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:நாட்டின் 80வது சுதந்திர தின கொண்டாட்டமாக தேசியக்கொடி இயக்கத்தை துவக்கி வைத்து வீட்டில் அனைவரும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையொட்டி திண்டுக்கல் எம்.வி.எம்.,கல்லுாரி மை பாரத் மன்றம், மாவட்ட இளையோர் பாரத இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை முதல்வர் லட்சுமி துவக்கி வைத்தார். மாவட்ட இளையோர் நலத்துறை அலுவலர் சிவசண்முகம் முன்னிலை வகித்தார்.

கல்லுாரி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் ஆர்.எம்., காலனி 80 அடி ரோடு வரை சென்று மீண்டும் கல்லுாரி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தி சுதந்திர தின விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

ஏற்பாடுகளை கல்லுாரி மை பாரத் இயக்க ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரி செய்திருந்தார். பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us