sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

/

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


ADDED : ஆக 16, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 79வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கலெக்டர் சரவணன் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

போலீஸ், தீயணைப்பு,ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி வெண்புறாக்கள் , வண்ண பலுான்களை பறக்கவிட்டார். எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 133, நீதித்துறை சார்ந்த 5, அரசு துறைகளை சேர்ந்த 276 அலுவலர்களுக்கும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் , 109 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் துாவி மாரியாதை செலுத்தினார்.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா கொடியேற்றினார்.அரசு போக்குவரத்துக்கழகத்தில் திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கினார். 10-ம், 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போக்குவரத்து பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.திண்டுக்கல் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கொடியேற்றினார். திண்டுக்கல் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் செயற்பொறியாளர் கண்ண தேவன் கொடியேற்றினார். உதவி பொறியாளர் சங்கவி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பாக கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சங்க தலைவர் சைலேந்திரராய் தலைமையில் தொழிலதிபர் சந்திரசேகர், தலைமையாசிரியர் முருகஜோதி கொடியேற்றினர். மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.ஏ.சாமி, செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ராம் நகர் குடியிருப்பு நலச்சங்க சார்பாக சங்க தலைவர் ராஜசேகரன் கொடியேற்றினார். கவுன்சிலர் வைகைமுத்து சித்திக் கலந்து கொண்டார். முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரன் பேசினார்.சீலப்பாடி மூவேந்தர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஓய்வு காவல் அதிகாரி பரமன் கொடியேற்றினார். சங்க தலைவர் ஜோதிலிங்கம், கவுரவ தலைவர் அன்புகிறிஸ்டியன், செயலர் வெங்கடசுப்பிரமணியன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.

புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஸ்டீபன் கொடியேற்றினார், திண்டுக்கல் பசுமை எப் எம் தொகுப்பாளர் சதீஸ்குமார் பேசினார். ஸ்ரீ சாவித்திரி வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் செயலாளர் பஞ்சவர்ணம் கொடியேற்றினார். தலைமையாசிரியர்கள் கோமதி, செல்வராணி பங்கேற்றனர். திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர்.

மாணவிகள் சௌமியா குப்தா, அக்ஷயா வரவேற்றனர். பள்ளி முதன்மை முதல்வர் சந்திர சேகரன் அறிமுகம் செய்தார். திண்டுக்கல் 14வது தேசிய மாணவர் படையில் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் கொடியேற்றினார். யோக சர்வதேச மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்த அச்யுதா கோச்சிங் நீட் மைய மாணவி இறைமலர் பாராட்டப்பட்டார். மாணவி ஆஸ்லி நன்றி கூறினார். மாணவர்கள் மாரி அஷ்வின், ஜோஹித், வைஷ்ணவி, மாணவி தக்ஷிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

திண்டுக்கல்லில் டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசுநிதிபெறும் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பிள்ளையார் நத்த மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஊராட்சி தலைவர் உலகநாதன் கொடியேற்றினார். முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி செல்வராணி, பள்ளி தாளாளர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தனர். முன்னாள் நிர்வாகி அப்துல்முத்தலிப், முன்னாள் மாணவரும், ராணுவவீரரான முத்துமணிகண்டன் கலந்து கொண்டனர். தலைமயைாசிரியை வர்ஷனி வரவேற்றார். பேகம்சாஹிபாநகர தொடக்கப்பள்ளியில் பள்ளப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பரமன் கொடி யேற்றினார். தலைமையாசிரியை பாத்திமாமேரி பேசினார். முன்னாள் வார்டு உறுப்பினர் பாண்டி முன்னிலை வகித்தார். அசனாத்புர தொடக்கப்பள்ளியில் தினசரி நாளிதழ் விநியோகிப்பாளர் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் நாதன், சுப்பிராம், முன்னாள் வார்டு உறுப்பினர் சின்னதம்பி முன்னிலை வகித்தனர். ஸ்ரீகாமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளி செயலர் நரசிங்க சக்தி கொடியேற்றினார். நிர்வாகி ராமலிங்கம், முதல்வர் லதா, அலுவலக அதிகாரி அகிலன் கலந்து கொண்டனர். திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரியில் முதல்வர் லட்சுமி கொடியேற்றினார்.

கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பேபி அழ.பாலகுரு தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் செல்வராணி முன்னிலை வகித்தார். ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.வ.உ.சிதம்பரம்பிள்ளை சிலை அமைப்பு, பராமரிப்பு டிரஸ்டின் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலர் தனபாலன் வரவேற்றார். மேற்கு வட்டாட்சியர் வில்சன் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார் கலந்து கொண்டனர். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மாவட்ட செயலர் நாகராசன் தலைமை வகித்தார். செயலர் சுப்பிரமணியம் கொடியேற்றினார். ஓய்வூதியர் சங்க செயலர் ஜெகநாதர், நாகல்நகர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் நம்பிக்கைநாதன் கலந்து கொண்டனர். குருதிகொடை அளித்து வரும் முத்துக்குமார் கவுரவிக்கப்பட்டார். மைய பொருளாளர் ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார்.திண்டுக்கல் சைவப் பெருமக்கள் பேரவை சார்பில் பேரவை செயலர் சுப்பிரமணி கொடியேற்றினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துவேல், சந்திரசேகர், மாணிக்கம், காந்தி, மணிமாறன், பழனிவேல்ராஜ், கண்ணன் பங்கேற்றனர்.

கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வள்ளலாளர் சன்மார்க்க சமூக சேவகர் அருணகிரி கொடியேற்றினார். மான்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநகர் துணை தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி தலைமை மன்றம் சார்பில் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். கவுரவ ஆலோசகர் டால்டன் கொடியேற்றினார். துணை தலைவர் மாரியப்பன் இனிப்பு வழங்கினார். அறகட்டளை தலைவர் நடராஜன் பேசினார். நிர்வாகிகள் தண்டபாணி, சேவியர், செல்வம், கவுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் முத்துக்குமார் ஏற்பாடுகளை செய்தார்.திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சங்க தலைவர் சுந்தரராஜன் கொடியேற்றினார். தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல மையம் திண்டுக்கல் மாவட்டம் கிளைசங்கம் சார்பாக சங்கதலைவர் சுகுமாரன் கொடியேற்றினார். துணைத் தலைவி லுார்து மேரி, செயலாளர் கீதா, சங்க கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை: முத்து பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டர் அஜகுராஜ் கொடியேற்றினார். பேரூராட்சி தலைவர் சுபாஷினி கதிரேசன், துணைத் தலைவர் முருகேசன், கவுன்சிலர்கள் செந்தில், காளிமுத்து, கணேசன், பேரூராட்சி அலுவலர் சேட்டு , அலுவலக பணியாளர் பாலகுமார் கலந்து கொண்டனர். மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அழகராஜ், மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஹரிஷ் அழகராஜ், இயக்குநர் டாக்டர் ஆர்த்தி ஹரிஷ், நிர்வாகத் தலைவர் மனோஜ்குமார் கலந்து கொண்டனர். இஷான் இன்ஸ்டிட்யூட் ஆப் பாராமெடிக்கல் மாணவர்கள் பாடல்கள், கவிதை வாசித்தனர். மீண்டும் மஞ்சப்பை சுற்றுச்சூழல் முயற்சியாக நோயாளிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டன. வேடசந்துார்: ஒன்றிய அலுவலகத்தில் எம்.எல்.ஏ., காந்திராஜன், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மேகலா, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பாலசுப்ரமணி, கூம்பூர் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., வசந்தா கொடியேற்றினர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வாசுமன்னார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் கொடியேற்றினார். மேலாண்மை குழு நிர்வாகிகள் நடராஜன், மனிஷா பங்கேற்றனர். பி.வி.எம்., மெட்ரிக்., பள்ளியில் தாளாளர் சூடாமணி கொடியேற்றினார். பள்ளி முதல்வர் செந்தில்குமார் பங்கேற்றார். ஈஸ்ட்மேன் நுாற்பாலையில் துணைத் தலைவர் விஜயகுமார் கொடியேற்றினார். முன்னாள் ஆசிரியர் சக்திவேல் பங்கேற்றார். வேடசந்துார் கலை அறிவியல் கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் சுமதி கொடியேற்றினார். தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் கொடியேற்றினார்.

தாடிக்கொம்பு ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிர்வாகி செந்தில்குமார் கொடியேற்றினார். தாளாளர் திவ்யா, கூடுதல் நிர்வாகி டாக்டர் லக்சித் பங்கேற்றனர்.

குஜிலியம்பாறை: டி.கூடலுார் வ.உ.சி., உயர்நிலைப் பள்ளியில், செயலாளர் சிங்காரம் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் அசோகன், முன்னாள் தலைமை ஆசிரியர் தங்கவேலு, ஆசிரியர்கள் சந்துரு, இளையராணி கீதா பங்கேற்றனர். சி.சி., குவாரி கரிக்காலி செட்டிநாடு சிமென்ட் ஆலையில் இணை தலைவர் கிருஷ்ணன் கொடி யேற்றினார். துணை பொது மேலாளர் ஜெயபிரகாஷ் பங்கேற்றார்.

தாலுகா அலுவலகத் தில் தாசில்தார் ரவிக்குமார் கொடியேற்றினார். ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,கற்பகம், போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., கலையரசன் , தீயணைப்பு நிலையத்தில் முன்னணி தீயணைப் போர் முனீஸ் குமரன் கொடியேற்றினார். ஆலம்பாடி ஊராட்சி சத்திரப்பட்டி காந்தி சிலைக்கு காங்.,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். சோழராஜன், சீனிவாசன், முருகேசன், வெள்ளைச்சாமி, ராமசாமி பங்கேற்றனர்.

கன்னிவாடி: தருமத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப்பள்ளியில் தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி கொடியேற்றினார். லயன்ஸ் நிர்வாகி கே.மாரியப்பன், பொறியாளர்கள் ராஜ்குமார், ராஜேஷ், ஊராட்சி முன்னாள் தலைவர் மருதமுத்து, முத்துப்பிள்ளை மகேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார்.ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சகிலா ராஜா கொடியேற்றினார். துணை தலைவர் முருகேசன் பங்கேற்றார்.

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் துணை வேந்தர் பஞ்சநதம் கொடியேற்றினார். பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி முன்னிலை வகித்தார். சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பிரதீபா கொடியேற்றினார். செயல் அலுவலர் இளவரசி பங்கேற்றார். சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் போதும்பொண்ணு கொடியேற்றினார். செயல் அலுவலர் ஜெயமாலு, துணைத் தலைவர் ஜாகிர் உசேன் பங்கேற்றனர். சின்னாளபட்டி விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மலர்வழி கொடியேற்றினார். துணை முதல்வர் மேரிஜான்சிராணி தலைமை வகித்தார். தாளாளர் ரவீந்திரன், அறக்கட்டளை துணை தலைவர் ஹரிஷ் வர்த்தன விக்னேஷ் முன்னிலை வகித்தார்.

--பழநி : பெரியம்மாபட்டி கரிக்காரன்புதுார் சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளியில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் கொடியேற்றினார். காங்., சார்பில் பஸ் ஸ்டாண்ட் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாலகுமார், முத்து விஜயன் , வீரமணி , முருகானந்தம் ,சுந்தர் கலந்து கொண்டனர்.பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் கல்லுாரி முதல்வர் ரவிசங்கர் கொடியேற்றினார். அரசு மகளிர் பள்ளியில் தலைமையாசிரியர் கண்ணகி கொடியேற்றினார். சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் மல்லிகா கலந்து கொண்டனர்.

சாமிநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் கர்ணன் கொடியேற்றினார். அரிமா சங்கத்தினர் சீருடை, புத்தகங்கள் வழங்கினர் .

பாரத் வித்யா பவன் பள்ளியில் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் ராஜாராமன் கொடியேற்றினார். பி.வி.பி., பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், அரிமா சங்க மயில்சாமி கலந்து கொண்டனர். பா.ஜ., சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் ஊர்வலமாக காந்தி மார்க்கெட் ரோடு வழியாக நேதாஜி சிலை வந்தனர். அங்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வடமதுரை: ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., பஞ்சவர்ணம் கொடியேற்றினார். துணை பி.டி.ஓ.,க்கள் சீதாலட்சுமி, சரோஜா, தமிழ்ச்செல்வி, ரேணுகாதேவி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பத்மலதா முன்னிலையில் தலைவர் நிருபாராணிகணேசன் கொடியேற்றினார். இளநிலை உதவியாளர் முரளிமோகன், தி.மு.க., நகர செயலாளர் கணேசன் பங்கேற்றார். கலைமகள் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ஆர்.கே.பெருமாள், குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நிதிகுமார், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி கொடியேற்றினர்.

தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமர் தலைமையில் பி.டி.ஏ., தலைவர் நரசிங்கன் கொடியேற்றினார்.கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வயநமசி முன்னிலையில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜரத்தினம் கொடியேற்றினார்.

அய்யலுார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் கொடியேற்றினார். செயல் அலுவலர் பத்மலதா முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து, எழுத்தர் மோகன் பங்கேற்றார். அய்யலூர் ரஞ்சித் மழலையர் துவக்க பள்ளியில் முதல்வர் மனோரஞ்சித் தலைமையில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார். அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் திருமாறன் கொடியேற்றினார்.தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குனர் சாந்தி முன்னிலையில் பள்ளி தாளாளர் ஸ்ரீதரன் கொடியேற்றினார்.

-எரியோடு: எரியோடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். செயல்அலுவலர் சையது அபுதாகிர் முன்னிலை வகித்தார். கலைவாணி மழலையர் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆபிரகாம் முன்னிலையில் நிறுவனர் சாவித்திரி கொடியேற்றினார்.

புதுரோடு இ.என்.பி., துவக்க பள்ளயில் முதல்வர் ராமசந்திரபிரபு முன்னிலையில் தாளாளர் இளங்கோவன் கொடியேற்றினார்.தோப்புப்பட்டி வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் கிருஷ்ணவேணி முன்னிலையில் முதல்வர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார்.

ஒட்டன்சத்திரம் : தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சஞ்சய்காந்தி கொடியேற்றினார். துணை தாசில்தார்கள் கனகராஜ், அன்சாரி, அலுவலர்கள் இந்திரா, பத்மா, மகாராஜான் கலந்து கொண்டனர். மரக்கன்றுகள் நடப்பட்டது. நகராட்சியில் தலைவர் திருமலைசாமி கொடியேற்றினார். பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் கலந்து கொண்டனர். காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மழலையர் துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் கே.ரங்கசாமி கொடியேற்றினார்.

தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி கலந்து கொண்டனர். ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளி யில் தாளாளர் திருப்பதி கொடியேற்றினார். செயலர்கள் சுரேஷ், கண்ணன், மீனா கலந்து கொண்டனர்.

பட்ஸ் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் கண்ணம்மாள் கொடியேற்றினார். முதல்வர் பொன்கார்த்திக் கலந்து கொண்டார்.காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ரத்தினம் கொடியேற்றினார்.

செயலாளர் சங்கீதா, பள்ளி முதல்வர் சிவகவுசல்யா தேவி, அலுவலக மேலாளர் வாணி கலந்து கொண்டனர். ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி பள்ளியில் முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் கொடியேற்றினார். பள்ளித் தலைவர் சாமிநாதன், தாளாளர் சித்தார்த்தன், செயலர் கவுதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா, பள்ளி முதல்வர் நர்மதாஸ்ரீ கலந்து கொண்டனர். தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் சங்கத் தலைவர் தங்கவேல் கொடியேற்றினார். செயலாளர் ராசியப்பன் துணைத் தலைவர் உதயம் ராமசாமி, துணைச் செயலாளர் சிவ பார்வதி கருப்புசாமி, முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.தொப்பக்காவலசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி கொடியேற்றினார். ஆசிரியர் ஆனந்தம் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் வட்டாரா முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் எம் .எஸ். மணி கொடியேற்றினார். செயலாளர் திருமலைசாமி, துணைத் தலைவர் தண்டபாணி, துணைச் செயலாளர் பால் ஜாக்சன் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் அக் ஷா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நகராட்சி கமிஷனர் ஸ்வேதா தேசிய கொடி ஏற்றினார். செயலாளர் பட்டாபிராமன் நினைவு பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் சவும்யா பேசினார். தேசத்தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களைப் போல் வேடமிட்டு அணிவகுப்பு நடத்தினர். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையை நினைவு கூறும் வகையில் மாணவர்களின் நாடகம் நடந்தது

- வத்தலக்குண்டு : ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., குப்புசாமி , பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சிதம்பரம் கொடியேற்றினார். துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சரவணகுமார் வரவேற்றார். தலைமை எழுத்தர் முருகேசன் நன்றி கூறினார். கூட்டுறவு நகர வங்கியில் பொது மேலாளர் வினோதினி தலைமை வகித்தார். நகைமதிப்பீட்டாளர் முத்துப்பாண்டியன் கொடி ஏற்றினார். பணியாளர்கள் சூர்யா, திவ்யா, பார்த்திபன் பங்கேற்றனர். ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் முதல்வர் நாகரத்தினம் கொடியேற்றினார். லயன்ஸ் சங்க தலைவர் செல்வகணேஷ், வட்டாரத்தலைவர் மனோதீபன், பொருளாளர் ராஜேஷ், அமிர்தவர்ஷினி ,இசை நடன சங்கத் தலைவர் வெங்கடேஸ்வரன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.கணவாய்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் கயல்விழி முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் கவுதம் கொடியேற்றினார்.

முதல்வர் காருண்யா தேவி வரவேற்றார். எஸ்.ஐ., சேக் அப்துல்லா பங்கேற்றார்.

மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வராணி வரவேற்றார். நிலக்கோட்டை முத்து மருத்துவமனை டாக்டர் ஆர்த்தி ஹரிஷ் கொடியேற்றினார். என்.சி.சி., ஜே.ஆர்.சி., சாரணர், பசுமை படை அணியினரின் கொடி அணி வகுப்பு மரியாதை நடந்தது. ஆசிரியர் சாவித்திரி தேவி நன்றி கூறினார்.

நத்தம்: நீதிமன்றத்தில் நீதிபதி ஆப்ரின்பேகம் கொடியேற்றினார். ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர்கள் கிருஷ்ணன்,ரவீந்திரன் கொடியேற்றினர். ராம்சன்ஸ் பள்ளியில் தாளாளர் ராமசாமி கொடியேற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆறுமுகம், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், தீயணைப்பு நிலையத்தில் அலுவலர் அம்சராஜன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன், வனத்துறை அலுவலகத்தில் வனச்சரக அலுவலர் ஆறுமுகம்,லாண்டீஸ் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ஹெர்பட்லாண்டீஸ், மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் முதல்வர் சத்யா, திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.வி., பள்ளியில் தொழில் அதிபர் ராஜ்மோகன் கொடியேற்றினர். பள்ளி தாளாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார்.

பட்டிவீரன்பட்டி : சேவுகம்பட்டி பேரூராட்சியில் தலைவர் வனிதா தங்கராஜன் கொடியேற்றினார். துணைத் தலைவர் தெய்வராணிவிஜி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரமேஷ் பாபு வரவேற்றார். மரக்கன்றுகள் நடப்பட்டன. பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் தலைவர் சியாமளா கொடியேற்றினார். செயல் அலுவலர் கோபி முன்னிலை வகித்தார்.என். எஸ். வி. வி. ஆண்கள் மேல்நிலை பள்ளியில் செயலாளர் நிர்மல் ராஜீவ் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். என். எஸ். வி. வி. மெட்ரிக் பள்ளியில் உறவின்முறை சங்க செயலாளர் மோகன் குமார் கொடியேற்றினார். செயலாளர் பிரசன்னா பேசினார். முதல்வர் ராம்குமார் வரவேற்றார்.என். எஸ். வி.வி. சாலா தொடக்கப்பள்ளியில் பெண்கள் பள்ளி தலைவர் ஞானசேகரன் கொடியேற்றினார். ஆலோசனை குழு உறுப்பினர் தீனதயாளன் பேசினார். தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார். என்.எஸ்.வி.வி. பெண்கள் மேல்நிலை பள்ளியில் தலைவர் ஞானசேகரன் கொடியேற்றினார். செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வசந்தா வரவேற்றார்.

கொடைக்கானல் : கொடைக்கானல் நகராட்சியில் தலைவர் செல்லத்துரை கொடியேற்றினார். துணைத் தலைவர் மாயக்கண்ணன், கமிஷனர் சங்கர் கலந்து கொண்டனர்.கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., நீலமேகம், போக்குவரத்து கிளை அலுவலகத்தில் மேலாளர் ராதாகிருஷ்ணன், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் நவநீதகிருஷ்ணன், பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலை அலுவலர் ராஜேஸ்வரி,ரோஜா பூங்காவில் தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி, ஆனந்தகிரி 6 வது தெருவில் 324 மாவட்ட அரிமா சங்க ஆளுநர் ரவீந்திரன், பண்ணைக்காடு விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் செயலாளர் பக்தானந்தா கொடியேற்றி னார். முதல்வர் ரஞ்சித் குமார் கலந்துகொண்டனர்.

பண்ணைக்காடு பேரூராட்சியில் தலைவர் முருகேஸ்வரி கொடியேற்றினார். துணைத் தலைவர் லதா, செயல் அலுவலர் ராஜசேகர் கலந்து கொண்டனர்.தாண்டிக்குடி மே பிளவர் மழலையர் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் தலைவர் பாலகும்பகன், தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் காபி வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கொடியேற்றினார். துணை இயக்குனர் ஜெயக்குமார் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கே. சி. பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் அசோகன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் கோகிலா ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us