ADDED : ஆக 15, 2026 04:30 PM
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமசாமி கொடியேற்றினார். மண்டல தாசில்தார்கள் அபிராமி, செல்வகுமார், சவுந்தரபாண்டி, அலுவலர்கள் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் ரகுராமன் கொடியேற்றினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துலட்சுமி, வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் கொடியேற்றினார். துணைத்தலைவர் முருகேசன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கே.சி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைவர் சுந்தரம் கொடியேற்றினார். செயலாளர் அண்ணாமலை, இயக்குனர் நாகராஜன், முதல்வர் சிவபாலன், மாணவர்கள் பங்கேற்றனர். முன்னாள் படைவீரர்கள் நல சங்கத்தில் முன்னாள் மேஜர் சவுந்தர பாண்டியன் கொடியேற்றினார். மணிகண்டன், செயலாளர் முருகானந்தம் பங்கேற்றனர்.
ஹெச்.என்.யு.பி.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன், நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் கொடியேற்றினர். முதல்வர் குமரேசன், தாளாளர் உதயசூரியன், உறவின்முறை, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
