ADDED : ஆக 15, 2026 04:50 PM
நத்தம், ஆக.16
நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரியில் மாணவர் விவகார குழு, மாணவர் நலன் குழு சார்பில் ‘இளம் உள்ளங்களில் பெரிய கனவுகள்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் வாழ்த்தினார். மாணவர் விவகாரக்குழு ஒருங்கிணைப்பாளர் தேவி முன்னிலை வகித்தார். மாணவர் நலன் குழு ஒருங்கிணைப்பாளர் நாகமணி பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் ஹரிபாலகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், ‘மாணவர்கள் பெரிய கனவுகள் காண நம்பிக்கையுடன் வளர்ந்து சவால்களை நேர்மறையாக எதிர்கொண்டு தனிப்பட்ட, தொழில்முறை குறிக்கோள்களை அடைய முயற்சிக்க வேண்டும்’ என்றார்.
என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
