UPDATED : ஆக 15, 2026 04:31 PM
ADDED : ஆக 15, 2026 04:20 PM
வெற்றிலை நகர் அரிமா சங்கத்தில் தலைவர் வெங்கடேஸ்வரன், மின்வாரிய இளநிலை பொறியாளர் வாமணன் கொடியேற்றினர். முதன்மை நிர்வாகி திருமணி, செயலாளர் மனோகரன், பொருளாளர் ஆனந்த்பாபு பங்கேற்றனர்.
வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தீபா கொடியேற்றினார். எம்.எல்.ஏ., அய்யனார், உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள் கோபி, சபினாபேகம் பங்கேற்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., ராஜ்மோகன் கொடியேற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சிதம்பரம் கொடியேற்றினார். செயல் அலுவலர் ஆஷா ராணி, துணைத்தலைவர் தர்மலிங்கம், தலைமை எழுத்தர் முருகேசன் பங்கேற்றனர்.
நகர கூட்டுறவு வங்கியில் முன்னாள் கூட்டுறவு துறை தணிக்கையாளர் காளிராம் கொடியேற்றினார். மேலாண்மை இயக்குனர் பாரிஷா, மேலாளர் வினோதினி, அலுவலர்கள் பங்கேற்றனர்.
சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் நாகரத்தினம் கொடியேற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் பள்ளியில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். தாளாளர் கயல்விழி, செயல் தலைவர் சித்தார்த் பங்கேற்றனர்.
ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஈடன் கார்டன் குழும தலைவர் கென்னடி கொடியேற்றினார். தாளாளர் அருள்மாணிக்கம், செயலாளர் ரோஸ் சுமதி, மேலாண்மை இயக்குனர் ஜெயந்த் பங்கேற்றார். அரிமா சங்க தலைவர் தவபாண்டியன், செயலாளர் ஜெர்மன் ராஜா, துணைத்தலைவர் ஜான் பங்கேற்றனர்.
மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்க தலைவர் கிருபாகரன் கொடியேற்றினார். பள்ளி தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ராமதாஸ், தலைமை ஆசிரியர் செல்வராணி, ஆசிரியர் சாவித்திரிதேவி பங்கேற்றனர்.
