தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சுதந்திர தினம்(வடமதுரை)

சுதந்திர தினம்(வடமதுரை)

சுதந்திர தினம்(வடமதுரை)


ADDED : ஆக 15, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: வடமதுரை ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., சீதாலட்சுமி கொடியேற்றினார். துணை பி.டி.ஓ.,க்கள் மாரியப்பன், சுமதி பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் நிருபாராணி கணேசன் கொடியேற்றினார். செயல் அலுவலர் பத்மலதா, துணைத்தலைவர் மலைச்சாமி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் இயக்குனர் சுப்பம்மாள், துவக்கப் பள்ளியில் அருள்மணி, குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், துணை மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி கொடியேற்றினர்.

கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் கொடியேற்றினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜரத்தினம் பங்கேற்றார். அய்யலுார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் கொடியேற்றினார். செயல் அலுவலர் சூசைஇன்பராஜேஷ் பங்கேற்றார்.

அய்யலுார் வனத்துறை அலுவலகத்தில் வனச்சரக அலுவலர் கணேஷ்பாண்டியன், துணை மின்நிலையத்தில் உதவி பொறியாளர் ராஜேஷ்குமார், ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் திருமாறன் கொடியேற்றினர்.

அய்யலுார் ரஞ்சித் மழலையர் துவக்கப்பள்ளியில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார். முதல்வர் மனோரஞ்சித் பங்கேற்றார். தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ஸ்ரீதரன் கொடியேற்றினார். இயக்குனர் சாந்தி பங்கேற்றார்.

எரியோடு: எரியோடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். செயல் அலுவலர் சையது அபுதாகிர் பங்கேற்றார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வினோதா, துணை மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் சிவராமன், கலைவாணி மழலையர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆபிரகாம் கொடியேற்றினர்.

தண்ணீர்பந்தம்பட்டி ஸ்ரீமகா வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் செயலாளர் ரேவதி கொடியேற்றினார். தாளாளர் சுப்பிரமணி, ஒருங்கிணைப்பாளர் லயோலா அருமை ராஜ், முதல்வர்கள் சத்தியவாணி, கார்த்திக், அந்தோணிதாஸ் பங்கேற்றனர்.

புதுரோடு இ.என்.பி., துவக்கப்பள்ளியில் தாளாளர் இளங்கோவன் கொடியேற்றினார். முதல்வர் ராமசந்திரபிரபு பங்கேற்றார்.

தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். தாளாளர் கிருஷ்ணவேணி பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us