ADDED : ஆக 15, 2026 04:11 PM
வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., மாணிக்கம் கொடியேற்றினார். கூடுதல் பி.டி.ஓ., கற்பகம் பங்கேற்றார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மேகலா கொடியேற்றினார். செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், துணைத்தலைவர் சாகுல்ஹமீது பங்கேற்றார்.
தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேந்திரன் கொடியேற்றினார். துணை தாசில்தார்கள் ரமேஷ், பொன்னுச்சாமி, அலுவலர்கள் பங்கேற்றனர். போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., தர்மர் கொடியேற்றினார். சிறப்பு எஸ்.ஐ., இளங்கோ, போலீசார் பங்கேற்றனர்.
வேடசந்துார் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் லோகநாதன் கொடியேற்றினார். டாக்டர்கள் அபர்ணா, பூவிழி, சிவராஜ்தீன் பங்கேற்றனர். ஞான ஒளி பார்வையற்றோர், ஊனமுற்றோர் மறுவாழ்வு நல சங்கத்தில் அரிமா சங்கத்தலைவர் அழகுராஜா கொடியேற்றினார். தலைவர் காளியப்பன், ஓய்வு பெற்ற தனி தாசில்தார் சிவசுப்பிரமணியன் பங்கேற்றனர்.
பி.வி.எம்.,மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் சூடாமணி கொடியேற்றினார். முதல்வர் செந்தில்குமார், மாணவர்கள் பங்கேற்றனர். தாடிக்கொம்பு ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரம் மேல்நிலைப்பள்ளியில் நிர்வாகி செந்தில்குமார் கொடியேற்றினார். தாளாளர் திவ்யா, இயக்குனர் லக்சித், மாணவர்கள் பங்கேற்றனர்.
