ADDED : ஆக 15, 2026 05:39 AM

அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு தெற்கு தெரு மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன், கருப்பண்ணசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு தாய்மார்கள் வளையல்களை அணிவித்து தாயும், சேயும் நலம் பெற வாழ்த்தினர்.
பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். அன்னதானம் நடந்தது. பூசாரிகள் கல்யாணசுந்தரம், பாண்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
