/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்தடை அறிவித்து ரத்து செய்வதால் பாதிக்கும் தொழில்கள்
/
மின்தடை அறிவித்து ரத்து செய்வதால் பாதிக்கும் தொழில்கள்
மின்தடை அறிவித்து ரத்து செய்வதால் பாதிக்கும் தொழில்கள்
மின்தடை அறிவித்து ரத்து செய்வதால் பாதிக்கும் தொழில்கள்
ADDED : ஆக 09, 2025 03:37 AM

வேடசந்துார்: வேடசந்துாரில் இரு மாதங்களாக மின் தடை அறிவிப்பதும் ரத்து செய்வதுமாக இருப்பதால் தொழில்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு தொழில் உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மின் விநியோக நடைமுறையில் மின் தடைகள் குறித்த அறிவிப்பு அந்தந்த பீடர் வாரியாக முன்கூட்டியே அறிவிக்கப் படுகிறது.
அனைத்து மின் வாரிய அலுவலகங் களுக்கும் அனுப்பப்படும் நிலையில் அந்த தகவல்கள் அப்பகுதி மக்களுக்கான அலைபேசிகளில் குறுஞ் செய்தியாகவும், நாளிதழ்களில் செய்தியாக வெளியிடப் படுகிறது.
மின்தடை அறிவிப்பு வந்தவுடன் சம்பந்தப்பட்ட நாள் அன்று அனைத்து சிறு, குறு தொழில் நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு விடுமுறை விட்டு விடுகின்றனர்.
இதனிடையே அரசியல் கட்சிகளின் தலையீடு காரணமாக முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளதாக கூறி தடை அறிவிப்பை ரத்து செய்துவிட்டு மின் விநியோகத்தை தொடர்கின்றனர்.
இதனால் தொழில் நிறுவனத்துக்கு விடுமுறை விட்டவர்கள், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய வேலைகளுக்கு ஜெனரேட்டர் வசதி செய்தவர்கள் பாதிக்கின்றனர்.
வேடசந்துார் ராஜா ரீவைண்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் எம்.ராஜ் குமார் கூறுகையில், '' மின் தடை அறிவிப்பை நம்பி விடுமுறையை விட்டு விடுகிறோம்.
விடுமுறையை விட்ட பிறகு மின்தடை ரத்து செய்வதால் முறையான வாடிக்கையாளர்கள் வருவதில்லை.
காரணம் மின்தடை என்ற அறிவிப்பு ரீச் ஆகி விடுகிறது.
மாவட்ட மின்வாரியம் மின் தடை அறிவிப்பை எந்த அரசியல் சக்தி களுக்கும் கட்டுப்படாமல் முறையாக செயல்படுத்த வேண்டும்.
இல்லையேல் மின்தடை அறிவிப்பை அறிவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.