/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைரோடு அருகே சிசு கொலை: தாய் கைது
/
கொடைரோடு அருகே சிசு கொலை: தாய் கைது
ADDED : ஏப் 24, 2025 03:16 AM
கொடைரோடு:திண்டுக்கல் மாவட்டம்  கொடைரோடு அருகே  ஜெ. ஊத்துப்பட்டியில் பெண் சிசுவை கொலை செய்த  தாய்  கைது செய்யப்பட்டார்.
ஜெ.ஊத்துப்பட்டியை  சேர்ந்தவர் மெக்கானிக் பாலமுருகன் 32. இவரது மனைவி சிவசக்தி 23.  5-வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவசக்திக்கு ஏப்.16ல் பெண் குழந்தை பிறந்தது.
மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் ஏப் 20-ல்  தாயே தேனில் பூச்சி கொல்லி மருந்து கலந்து கொடுத்து   குழந்தையை கொலை செய்தார். வீட்டின் பின்புறம் புதைத்தனர்.
தகவலறிந்த ஜம்புதுரைக்கோட்டை வி.ஏ.ஓ.,  கலா, கிராம செவிலியர் சிவசக்தி முன்னுக்கு பின் முரணாக பேசினார். சந்தேகமடைந்த கிராம செவிலியர் அம்மையநாயக்கனுார் மருத்துவ அலுவலரிடம் தெரிவித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் வினோத், அம்மையநாயக்கனுார் போலீசில் புகார் செய்தார். சிவசக்தி, பாலமுருகனிடம்   இன்ஸ்பெக்டர் அமுதா விசாரித்தார்.
நிலக்கோட்டை தாசில்தார் விஜயலெட்சுமி முன்னிலையில்  குழந்தை உடல் தோண்டி எடுக்கப்பட்டது. டாக்டர்கள்  தேவி பியான்ஷா, ஜெயபிரகாஷ்  பரிசோதனை செய்தனர். இதில் கொலை செய்யப்பட்டது தெரியவர சிவசக்தியை போலீசார் கைது செய்தனர்.

