/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாரச்சந்தையில் கொட்டப்படும் கோழி, மீன் கழிவுகளால் தொற்று
/
வாரச்சந்தையில் கொட்டப்படும் கோழி, மீன் கழிவுகளால் தொற்று
வாரச்சந்தையில் கொட்டப்படும் கோழி, மீன் கழிவுகளால் தொற்று
வாரச்சந்தையில் கொட்டப்படும் கோழி, மீன் கழிவுகளால் தொற்று
ADDED : ஏப் 13, 2025 04:13 AM

நிலக்கோட்டை : நிலக்கோட்டை வாரச்சந்தையில் கொடைக்கானல், வத்தலக்குண்டு, வாடிப்பட்டி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதி வியாபாரிகள் 100க்கு மேற்பட்ட கடைகள் அமைத்து விற்பனை செய்கின்றனர். இதையொட்டி தினசரி காய்கறி ,கோழி, மீன் கடைகள் உள்ளது. இங்கு கோழி , மீன் கழிவுகளை கொட்ட இடமின்றி சந்தையிலே கொட்டி வருகின்றனர். சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுகிறது .
வியாபாரி இப்ராஹிம் கூறுகையில்,'' குப்பையில் புழுக்கள் தோன்றி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் கிராமத்தினர் இந்த பகுதிக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார் .
வியாபாரி காவேரி கூறுகையில்,'' சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், வாரச்சந்தையை ஏலம் எடுத்துள்ள ஒப்பந்ததாரரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் கலெக்டர் நேரில் ஆய்வு செய்து வாரச்சந்தையில் கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்,''என்றார்.