/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பையை குவித்து எரிப்பதால் உருவாகும் புகையால் தொற்று
/
குப்பையை குவித்து எரிப்பதால் உருவாகும் புகையால் தொற்று
குப்பையை குவித்து எரிப்பதால் உருவாகும் புகையால் தொற்று
குப்பையை குவித்து எரிப்பதால் உருவாகும் புகையால் தொற்று
ADDED : நவ 13, 2024 04:17 AM

மின்கம்பத்தில் செடிகள் : பழநி டி.எஸ்.பி. கேம்ப் முல்லை நகரில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளன .இதனால் விபத்து அபாயம் உள்ளது. இதன் அருகே செல்வோர் பயத்துடனே செல்கின்றனர் . செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். --கண்ணன், பழநி.
............--------
சேதமான ரோடு : குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி செங்குளத்துப்பட்டி குளத்துக்கரையில் இருந்து கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது.இதனால் நடந்து செல்வோர் அவதிக்கு ஆளாகின்றனர்.
-ஆர்.ரவிச்சந்திரன், முத்துவீரன்பட்டி.
...........---------
திறந்தவெளியை நாடும் மாணவர்கள் : அய்யலுார் குளத்துபட்டி துவக்கப்பள்ளி சுகாதார வளாகம் சேதமடைந்து பயனற்று கிடப்பதால் மாணவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் சுகாதாரவளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ---
-பாண்டி, அய்யலுார்.
................
குப்பையை குவித்து எரிப்பு : நத்தம் அருகே பூதகுடி ஊராட்சி அலுவலகம் அருகிலே குப்பை அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து புகை பரவுவதால் சுவாசப் பிரச்னை , நோய் பரவும் அபாயம் உள்ளது.
-ராஜேஸ்வரி, பூதகுடி.
................----------
ரோடு பள்ளத்தால் சிரமம் : திண்டுக்கல் ஜி.டி.என்.சாலை எஸ். எம்.பி. பள்ளி அருகே ரோடு பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன . பெரும் விபத்துக்கு முன் ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-பி. பாலமுருகன், ஒய்.எம்.ஆர்.பட்டி.
.............
----------
திறந்தவெளி கிணறால் விபத்து : திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோடு செல்லும் வழியில் வேடப்பட்டி அருகே ரோடு வளைவில் திறந்தவெளி கிணற்றால் விபத்து அபாயம் உள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன் இங்கு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய், திண்டுக்கல்.
...........-----------
சாக்கடை இன்றி கழிவுநீர் தேக்கம் : நத்தம் அருகே கம்பிளியம்பட்டியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி ஆங்காங்கே நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாக்கடை அமைத்து தர வேண்டும்.
-வெ.பாஸ்கரன், சுக்காம்பட்டி.
.............---------