/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோப்கார் பராமரிப்பு பணிகள் துவக்கம்
/
ரோப்கார் பராமரிப்பு பணிகள் துவக்கம்
ADDED : அக் 08, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயில் சென்று வர பயன்படுத்தப்படும் ரோப் கார் பராமரிப்பு பணிகள் நேற்று துவங்கி நடந்து வருகிறது.
பழநி கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகளை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மூன்று நிமிடத்திற்குள் கோயில் செல்ல ரோப்கார் சேவை பயன்படுகிறது.
நேற்று முதல் ரோப் கார் நிறுத்தப்பட்டு வருடாந்திர பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டன.
பராமரிப்பின் போது பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் புதிதாக மாற்றப்பட உள்ளன. 40 நாட்கள் இப்பணிகள் நடப்பதால் பக்தர்கள் படிப்பாதை, வின்ச் வசதியை பயன்படுத்தி கொள்ள கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.