ADDED : மார் 10, 2024 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை :நிலக்கோட்டை அருகே எத்திலோடு,ஆவாரம்பட்டி, கருத்தாண்டிபட்டி, காமாட்சிபுரம் பகுதிகளில் 400க்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது.
தற்போது அறுவடை காலம் தொடங்கியதை அடுத்து அரசின் கொள்முதல் நிலையம் நேற்று முதல் செயல்பட துவக்கியது. விவசாயிகளிடமிருந்து இதை நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிகண்டன் துவக்கி வைத்தார். ஒன்றிய துணைச்செயலாளர் வெள்ளிமலை, கண்மாய் பாசன சங்க தலைவர் மாயாண்டி, ஒன்றிய கவுன்சிலர் தியாகு பங்கேற்றனர்.

