ADDED : மார் 14, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை வைகை ஆற்றுப்படுகையை சார்ந்த ராமராஜபுரம் பகுதியில் 450க்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
அறுவடை காலம் துவங்ய சூழலில் இங்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் துவக்கினார்.
ஊராட்சி தலைவர் பழனியம்மாள், ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

