/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் சிரமம்
/
ஒட்டன்சத்திரத்தில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் சிரமம்
ஒட்டன்சத்திரத்தில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் சிரமம்
ஒட்டன்சத்திரத்தில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் சிரமம்
ADDED : மார் 09, 2026 06:32 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் செயல்படாத போக்குவரத்து சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோடு, பழனி ரோடு சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தாராபுரம் ரோடு வழியாக செல்கின்றன. ஒட்டன்சத்திரத்துக்கும் இதே ரோட்டில் வர வேண்டும்.
பழநியில் இருந்து வரும் வாகனங்களின் குறுக்காக தாராபுரம் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் செல்கிறது. தினமும் காலை, மாலை வேளையில் இந்த ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இந்த ரோட்டின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் இருப்பதால் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. சரியாக சிக்னல் போடாமல் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே போக்குவரத்து சிக்னல்களை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

