/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதுகாப்பில்லாத கலெக்டர் அலுவலகம்; அலட்சியப்போக்கில் மாவட்ட நிர்வாகம்
/
பாதுகாப்பில்லாத கலெக்டர் அலுவலகம்; அலட்சியப்போக்கில் மாவட்ட நிர்வாகம்
பாதுகாப்பில்லாத கலெக்டர் அலுவலகம்; அலட்சியப்போக்கில் மாவட்ட நிர்வாகம்
பாதுகாப்பில்லாத கலெக்டர் அலுவலகம்; அலட்சியப்போக்கில் மாவட்ட நிர்வாகம்
ADDED : பிப் 21, 2024 05:52 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலம் பாதுகாப்பில்லாமலும், சுகாதாரமற்ற சூழல் நிலவுகின்ற நிலையில் அலட்சிப்போக்கோடு செயல்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமையும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 300 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கின்றனர். இதுவரை கலெக்டர் முன் வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வந்த பொதுமக்கள் 2 வாரங்களாக பின் பகுதி வழியாக கூட்ட அரங்குக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
மனுக்கள் பதிவு செய்வதற்கு கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும் புதிய இடத்தில் பொதுமக்கள் காத்து நிற்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்த பகுதியில் தேக்கு மரங்களின் உதிர்ந்த இலைகள் காய்ந்து குப்பையாக தேங்கி கிடக்கின்றன. இந்த பகுதிக்கு அருகே வனத் துறை சார்பில் மரக் கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றாங்கால் உள்ளது. மரக் கன்றுகள் நிறைந்துள்ள அந்த பகுதியில் அடிக்கடி பாம்புகள் வெளியேறுவது வழக்கம். இதுபோன்ற சூழலில் மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகளை அப்புறப்படுத்தாமல் குப்பையாக இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மனு அளிக்க வந்த பொதுமக்கள் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் காத்திருந்த நேரத்தில் முன்னெச்சரிக்கை இல்லாமல் குப்பை மீது அமர்ந்து கொண்டும், நடமாடிக் கொண்டும் உள்ளனர். நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் இடத்தை தூய்மையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

