/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை இந்த ஆண்டே வழங்க வலியுறுத்தல்
/
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை இந்த ஆண்டே வழங்க வலியுறுத்தல்
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை இந்த ஆண்டே வழங்க வலியுறுத்தல்
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை இந்த ஆண்டே வழங்க வலியுறுத்தல்
ADDED : மார் 16, 2025 02:17 AM
திண்டுக்கல்:''ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை இந்த ஆண்டே தமிழக அரசு வழங்க வேண்டுமென'' தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் மீண்டும் 15 நாட்கள் கணக்கிட்டு வழங்கப்படும் என நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதை ஒரு புறம் வரவேற்றாலும், அடுத்த ஆண்டு ஏப். 1 முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அவர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் கூறியதாவது:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கான அறிவிப்பு இல்லை.தற்போது ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் அடுத்தாண்டு வழங்கப்படும் என தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. அதுபோன்ற எங்களின் பிரதான கோரிக்கைகளை இந்த ஆண்டே நிறைவேற்ற சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும் என்றார்.