/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகள் ஆய்வு
/
அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 30, 2024 06:56 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை. நோயாளிகள் தேவைக்கேற்ப போதிய மருந்துகள், டாக்டர்கள் இல்லை.
இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதன் அடிப்படையில் மருத்துவ ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் அரசு மருத்துவமனைகளுக்கு குழுவாக சென்று ஆய்வு செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று முதல்கட்டமாக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானலில் தங்கி இன்று காலை கொடைக்கானல், பண்ணைக்காடு,தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதி அரசு மருத்துமவமனைகளில் ஆய்வில் ஈடுபட உள்ளனர்.
ஆய்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.