/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கண்காணிக்க அறிவுறுத்தல்
/
லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கண்காணிக்க அறிவுறுத்தல்
லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கண்காணிக்க அறிவுறுத்தல்
லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கண்காணிக்க அறிவுறுத்தல்
ADDED : செப் 26, 2024 03:11 AM
திண்டுக்கல்:திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் பொருட்களை ரகசியமாக கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகள், மீன் கொழுப்புகள் கலந்திருப்பதாக புகார்கள் வெளியானது. இதற்கு நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய, மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருள்களின் மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வு செய்தனர். மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பொருட்களின் கழிவுகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று மத்திய அரசு உயர் அதிகாரிகள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தமிழக உணவு பாதுகாப்பு துறை தலைமை அதிகாரிகள், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்த வீடியோ கான்பிரன்ஸ் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
அரை மணி நேரம் நடந்த இதில் திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து தயாராகும் உற்பத்தி பொருட்களான பால், தயிர், வெண்ணெய், பனீர், நெய் உள்ளிட்ட பொருட்களை ரகசியமாக கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளை மத்திய அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

