/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதுமானதாக இல்லை இ சேவை மையம்: ஆதார் மையங்களை அதிகரிக்க வலியுறுத்தல்

ADDED : நவ 08, 2025 01:51 AM
பழநி: பழநியில் ஆதார் இசேவை மையங்கள் போதுமான அளவு இல்லாததால் சேவை மைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
பழநி நகராட்சி பகுதியில் தாலுகா அலுவலகம், போஸ்ட் ஆபீஸ், நகராட்சி அலுவலகம் என மூன்று இடங்களில் அரசு சார்பில் ஆதார் இ- சேவை மையம் செயல்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆதார் திருத்தங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக 15 வயது மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் அப்டேட் செய்யப்பட வேண்டிய கட்டாய தேவை ஏற்படுகிறது.
தினமும் காலையில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்ற பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகளை விடுமுறை எடுத்துவர செய்து ஆதார் திருத்தங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் போதுமான அளவு ஆதார் மையங்கள் இல்லாததால் கூட்டம் அதிகரிக்கும் காரணத்தினால் சிலருக்கு மட்டும் டோக்கன் கிடைப்பதால் ஆதார் மைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.
இதை கட்டுப்படுத்த ஆதார் திருத்த முகாம்களை விடுமுறை நாட்களிலும் அமைக்க வேண்டும். இதோடு ஆதார் திருத்த சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.