/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
/
காட்டுமாடுகளால் பூண்டு விவசாயம் பாதிப்பு
ADDED : நவ 08, 2025 01:51 AM

மாடுகளை விரட்டச்சென்ற விவசாயி காயம்
கொடைக்கானல்: கொடைக்கானல் மன்னவனுாரில் விவசாய நிலத்தில் பூண்டு பயிர்களை சேதப்படுத்திய காட்டு மாட்டை விரட்டிய விவசாயி காயம் அடைந்தார்.
மன்னவனுார் பகுதியில் சில தினங்களாக விவசாய நிலத்தில் காட்டுமாடு புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து வனத்துறையினருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மன்னவனுாரை சேர்ந்த குப்புலிங்கம் 28, கும்பூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பூண்டு நடவு செய்துள்ளார்.
இங்கு வந்த காட்டுமாடுகளை விரட்டிய போது காயம் அடைந்தார். மேல் மலை பகுதியில் காட்டுப்பன்றி, காட்டு மாடுகளால் விவசாயம் சேதமடைந்து வருவது கவலை அளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை வனத்துறை ஏற்க மறுப்பதாக கூறி நேற்று மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் நுழைவுவாயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உதவி வன பாதுகாவலர் கருப்பையா, ரேஞ்சர் திருநிறைசெல்வன் பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

