ADDED : பிப் 13, 2025 05:52 AM
திண்டுக்கல்: சி.எஸ்.கே., திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கிடையேயான லீக் போட்டியில் எஸ்.எஸ்.எம்., பள்ளி வெற்றி பெற்றது.
லீக்போட்டிகள் ரிச்மேன், ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடந்த போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 20 ஓவர்களில் 91/8. சேசிங் செய்த வடமதுரை அரசுப்பள்ளி 14.2 ஓவர்களில் 62 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. பரத் 3 விக்கெட்.
வேடந்துார் பெட்போர்டு பள்ளி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 128/9. ஆனந்த் 48, ஸ்ரீஷாலினி 3 விக்கெட்.
சேசிங் செய்த திண்டுக்கல் அக்சுதா அகாடமி அணி 21.3 ஓவர்களில் 52 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. ஜெயந்த் 5 விக்கெட். திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா பி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 134/4. தனிஷ் 40, கோகுல் 3 விக்கெட். சேசிங் செய்த எஸ்.எஸ்.எம்., அகாடமி அணி 20 ஓவர்களில் 129/9 எடுத்து தோற்றது. சித்தார்த் 80.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் நேருஜி நினைவு பள்ளி 21.3 ஓவர்களில் 73 க்கு ஆல்அவுட். சனோபர்பாத்திமா 4 விக்கெட்.
சேசிங் செய்த செட்டிநாயக்கன்பட்டி 7.3 ஓவர்களில் 77/1 எடுத்து வென்றது. பிரகாஷ்ராஜ் 46(நாட்அவுட்). முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா ஏ அணி 20 ஓவர்களில் 154/8. ரத்தீஷ் 44. சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் பட்ஸ் பள்ளி அணி 20 ஓவர்களில் 93/5 எடுத்து தோற்றது. திருமலைஹரிஷ் 35 ரன் எடுத்தார்.