/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெண்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கம்
/
பெண்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கம்
ADDED : செப் 22, 2024 03:44 AM

திண்டுக்கல் : ஜி.டி.என்., கல்லூரியின் பொருளாதாரத் துறை, சமூகப்பணித்துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கம் பெண்களுக்கான உரிமை வழங்குதல் எனும் தலைப்பில் நடந்தது.
கல்லுாரி தாளாளர் ரெத்தினம், இயக்குனர் துரை முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாதாரத் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
பொருளியல்துறை தலைவர் ரவிச்சந்திரன் எழுதிய பெண்கள் அதிகாரம் மற்றும் சுய உதவி குழுக்கள் எனும் புத்தகம் வெளியிடப்பட்டது.
இதனை கல்லுாரி முதல்வர் சரவணன் வெளியிட இத்தாலியைச் சேர்ந்த பெனிடிட்டா பெற்றுக்கொண்டார். சமூகப்பணித்துறை உதவிப்பேராசிரியர்கள் ராஜா, பாலகோமளா, கதிரவன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.
திண்டுக்கல் சிம்கோடஸ் இயக்குனர் விசுவாசம் ஞான ஆரோக்கியம், மதுரை அன்னை பாத்திமா கல்லுாரி திருப்பதி, திண்டுக்கல் சிம்கோடஸ் திட்ட மேலாளர் மரியா லீமா ரோஸ் பேசினர்.
சமூகப்பணித்துறை துறைத்தலைவர் ரெஜினா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை அருண், ராஜா, கதிரவன், பலகோமாளா, சாலிமா செய்தனர். மாணவி தீபிகா தொகுத்து வழங்கினார்.