ADDED : டிச 08, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் தமிழ்த்துறை , மதுரை மறுபக்கம் அமைப்பு சார்பில் மதுரை சர்வதேச திரைப்பட திருவிழா நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.
தமிழ் துறை தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். கன்னடம், மலையாளம், ஹிந்தி, சீன மொழிகளில் வெளியான ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.
கன்னட மொழி திரைக்கதையாளர் ஹர்ஷித், ஆவணப்பட இயக்குனர் சவுந்தர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
முதன்மை தலைவர் முத்தையா பேசினார். புனரமைக்கப்பட்ட குறள் அரங்கை துணை வேந்தர் திறந்து வைத்தார். நுண்கலை துறை உதவி பேராசிரியர் கேசவராஜராஜன் நன்றி கூறினார். காந்திகிராம பல்கலை, நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை மாணவியர் பங்கேற்றனர்.