/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சட்டசபை தேர்தல் வெற்றியை 'கள்' நிர்ணயிக்கும் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி

ADDED : மே 19, 2025 03:08 AM
பழநி: ''2026 சட்டசபை தேர்தல் வெற்றி தோல்வியை 'கள்' நிர்ணயிக்கும் ''என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
பழநியில் அவர் கூறியதாவது :
ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் சுற்றுலா சென்ற அழகிகள் கள் அருந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ் மண்ணின் மென்பானம் கள். தமிழகத்தில் கள் தடை கண்டனத்திற்குரியது.
கள் அருந்துவதால் தீமை எனில் எங்கள் இயக்கத்தோடு விவாதம் செய்து வெற்றி பெற வேண்டும். பீஹாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளன.
கள்ளச்சாராய மரணங்களின் போது அந்த அரசு இழப்பீடு வழங்கவில்லை. தமிழக அரசு கள்ளச்சாராய மரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது. டிசம்பரில் திருச்சியில் 'கள்' விடுதலை மாநாடு நடத்தப்படும். அதில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு 2026 சட்டசபை தேர்தலின் கட்சிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதற்கான அடித்தளமாக அமையும். கொலை, கொள்ளையில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக அரசு தண்டனை பெற்று தர வேண்டும் என்றார்.