ADDED : பிப் 16, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும், சின்னக்கலையம்புத்துார், பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவில் உள்ள ஆசிரியரல்லா அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கப்பட்டிருந்த நேர்காணலில் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது போல் நாளை நடக்கவிருந்த இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல், மார்ச் 10, நாளை மறுநாள் நடக்கவிருந்த இளநிலை உதவியாளர் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் மார்ச் 11 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.