/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலப்பட பூண்டு கண்டறியும் உபகரணம் அறிமுகம்
/
கலப்பட பூண்டு கண்டறியும் உபகரணம் அறிமுகம்
ADDED : செப் 28, 2024 04:56 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் தெரசா பல்கலையில் மலைப் பூண்டிற்கு மாற்றாக கலப்படம் செய்து விற்கப்படும் பூண்டுகளை கண்டறியும் உபகரணத்துடன் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்நடந்தது.
தமிழ்நாடு நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் ஆனந்த் பூண்டு பரிசோதிக்கும் கையடக்க சோதனை பெட்டகத்தை அறிமுகப்படுத்தினார். இதை தெரசா பல்கலை துணை வேந்தர் கலா பெற்றார். பதிவாளர் ஷீலா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி, நபார்டு மாவட்ட மேலாளர் ஹரீஷ், உயிரி தொழில்நுட்ப பிரிவு பேராசிரியர் உஷாராஜ நந்தினி கலந்து கொண்டனர்.
மலைபூண்டிற்கு மாற்றாக இதர பிற ரகங்களை கொடைக்கானல் மலைப் பூண்டு என சந்தையில் விற்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 17 லட்சத்தில் கையடக்க பரிசோதனை பெட்டகம், பி.சி. ஆர்., என இரு பிரிவுகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கலப்பட பூண்டுகளை எளிதில் கண்டறிய ஏதுவாக கையடக்க பரிசோதனை பெட்டகம் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இங்கு முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இலவசமாக 750 விவசாயிகளுக்கு இந்த பெட்டகம் வழங்கப்பட உள்ளது.
மேலும் தேவைப்படும் விவசாயிகள் ரூ. 350 செலுத்தி தெரசா பல்கலையைதொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.