/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாலிபர் கொலை நால்வரிடம் விசாரணை
/
வாலிபர் கொலை நால்வரிடம் விசாரணை
ADDED : அக் 03, 2024 06:09 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த வாலிபர் கொலையில் தொடர்புடைய நால்வரை போலீசார் நேற்று பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான்24. இவரை செப்.28 ல் மர்ம நபர்கள் டூவலரில் சென்றபோது அரிவாளால் தலையை வெட்டி கொலை செய்தனர்.
தகவலறிந்த வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி,எஸ்.ஐ.,சரத்குமார் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலையான முகமது இர்பான்,2023ல் நடந்த பட்டறை சரவணன்,கொலையில் தொடர்பிருப்பது தெரிந்தது.
பழிக்கு பழியாக கொலை நடந்துருக்குமோ என்ற அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. அக்.1ல் குற்றவாளிகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடையபோவதாக தகவல்கள் வெளியானது.
இதனால் போலீசார் நீதிமன்றத்தில் குவிந்தனர். அன்றும் அவர்கள் வராமல் தலைமறைவாகினர்.
நேற்று இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது இக்கொலையில் தொடர்புடைய நால்வரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.