/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக திண்டுக்கல்லில் விசாரணை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது
/
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக திண்டுக்கல்லில் விசாரணை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக திண்டுக்கல்லில் விசாரணை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக திண்டுக்கல்லில் விசாரணை: முக்கிய ஆவணங்கள் சிக்கியது
ADDED : ஆக 05, 2024 06:27 PM

திண்டுக்கல் : கரூரில் நிலமோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அ.தி.மு.க.,அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் திண்டுக்கல்லில் அரசு ஒப்பந்த பணிகளில் ஈடுபடும் அலுவலகங்கள் உட்பட 3 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கரூர் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அ.தி.மு.க.,அமைச்சர் விஜயபாஸ்கர்,போலியான ஆவணங்களை தயார் செய்து தன் ஆதரவாளர்கள் பெயருக்கு மாற்றியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பலரை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தநிலையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய அனைத்து பிரமுகர்கள்,பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணையை துவக்கினர். அப்போது ரூ.பல லட்சங்கள் திண்டுக்கல்லிலிருந்து பரிமாற்றம் செய்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து நேற்று கரூர் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் திண்டுக்கல் வருவாய் அதிகாரிகளோடு இணைந்து திண்டுக்கல் முனிசிபல் காலனியில் உள்ள அரசு ஒப்பந்த பணிகளை டெண்டர் மூலம் எடுத்து செய்யும் தனியார் அலுவலகத்தில் காலை 10:00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதியம் 1:30 மணி வரை நடந்த சோதனையில் போலீசாரிடம் பண பரிமாற்றத்திற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. போலீசார் அதை கைப்பற்றி திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்றனர். இதேபோல் தாடிக்கொம்பு,குஜிலியம்பாறை பகுதிகளிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.